தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 9 மணியளவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தொடர்ந்து மணிக்கு 12 கிமீ வேகத்தில் வடக்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையில் இருந்து 590 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 800 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
விரைவில் இது தீவிரமடைந்து நவம்பர் 27-ம் தேதி ஃபெங்கல் புயலாக மாறும்.புயல் காரணமாக தமிழகத்தில் நவம்பர் 30 ஆம் தேதி வரை மிக கனமழை பெய்ய கூடும்.
இதனால், வங்கக் கடல் பகுதிகளில் 29-ஆம் தேதி மாலை வரை மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும், சில சமயங்களில் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும். இதனால், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புயல் காரணமாக நாகபட்டினம், கடலூர் உட்பட வட கடலோர மாவட்டங்களிலும், அதனை ஒட்டிய உள் மாவட்டங்களிலும் மீட்புப்படையினர் தயார் நிலையில் உள்ளனர். புயலின் நகர்வுகளை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து அவ்வப்போது அறிவுரை வழங்கி வருகிறது.
புயலின் நகர்வு தன்மையை Windy.com எனப்படும் இணையதளத்தில் நேரடியாக கண்காணிக்கலாம். இதனால், நாம் நம்மையும் குடும்பத்தினரும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
ஃபெங்கலைத் தொடர்ந்து, இலங்கை பரிந்துரைத்தபடி அடுத்த சூறாவளிக்கு சக்தி என்று பெயரிடப்படவுள்ளது. அதனை தொடர்ந்து உருவாகும் புயலுக்கு தாய்லாந்து பரிந்துரை செய்த மோந்தா என்ற பெயர் வைக்கப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
வேலைக்காக மதமாற்றம்… இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது : உச்ச நீதிமன்றம்!
14 மாத சண்டைக்கு பிறகு இஸ்ரேல், ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம்