நகைப்பிரியர்களே இன்று தங்கம் வாங்கலாமா? விலை குறைஞ்சிருக்கா… ஏறியிருக்கா? இதோ லேட்டஸ்ட் அப்டேட்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (ஜூன் 16) 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உலகளாவிய தேவை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்று தங்கத்தின் விலை சற்று சரிந்துள்ளதோடு, வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.5,000 வரை அதிரடியாகக் குறைந்துள்ளது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை:

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.14,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், ஒரு சவரன் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.1,12,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

அதேபோல், 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.11,790-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை:

ADVERTISEMENT

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.275-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 குறைந்து ரூ.2,75,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)
15-6-20261,12,560
14-6-20261,10,880
13-6-20261,10,880
12-6-20261,10,400
11-6-20261,08,000
10-6-20261,10,400
9-6-20261,13,600
8-6-20261,12,560
7-6-20261,13,600
6-6-20261,13,600

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

15-6-2026280
14-6-2026270
13-6-2026270
12-6-2026265
11-6-2026260
10-6-2026260
9-6-2026270
8-6-2026270
7-6-2026270
6-6-2026280
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share