அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை! இன்றைய முழு விபரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (ஜூன் 15) 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,680 வரை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் உலகளாவிய தங்கம் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில், வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.10,000 வரை அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.210 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,070-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.190 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.10 உயர்ந்து ரூ.280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.10,000 உயர்ந்து ரூ.2,80,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)
14-6-20261,08,000
13-6-20261,08,000
12-6-20261,10,400
11-6-20261,08,000
10-6-20261,10,400
9-6-20261,13,600
8-6-20261,12,560
7-6-20261,13,600
6-6-20261,13,600
5-6-20261,15,440

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

14-6-2026270
13-6-2026270
12-6-2026265
11-6-2026260
10-6-2026260
9-6-2026270
8-6-2026270
7-6-2026270
6-6-2026280
5-6-2026280
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share