சென்னையில் இன்று (ஜூன் 12) ஒரு சவரன் தங்கம் ரூ.2,400 உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வ தேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தங்கத்தின் தேவை, போர் பதற்றங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. அந்த வகையில் இன்று ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 வரை உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ.300 உயர்ந்து ரூ. 13,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு சவரன் தங்கம் ரூ. 2400 வரை உயர்ந்து ரூ. 1,10,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 240 உயர்ந்து ரூ.11,550க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் கடந்த 2 நாட்களாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில் இன்று சற்றே உயர்ந்துள்ளது. வெள்ளிவிலை இன்று ஒரு கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.265க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 5,000 வரை உயர்ந்து ரூ. 2,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)
| 11-6-2026 | 1,08,000 |
| 10-6-2026 | 1,10,400 |
| 9-6-2026 | 1,13,600 |
| 8-6-2026 | 1,12,560 |
| 7-6-2026 | 1,13,600 |
| 6-6-2026 | 1,13,600 |
| 5-6-2026 | 1,15,440 |
| 4-6-2026 | 1,15,840 |
| 3-6-2026 | 1,16,000 |
| 2-6-2026 | 1,16,000 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)
| 11-6-2026 | 260 |
| 10-6-2026 | 260 |
| 9-6-2026 | 270 |
| 8-6-2026 | 270 |
| 7-6-2026 | 270 |
| 6-6-2026 | 280 |
| 5-6-2026 | 280 |
| 4-6-2026 | 285 |
| 3-6-2026 | 290 |
| 2-6-2026 | 290 |
