சென்னையில் இன்று (ஜூன் 11) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 வரை அதிரடியாகக் குறைந்துள்ளது நகைப்பிரியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் உலகளாவிய தங்கத்தின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்று தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.300 குறைந்து ரூ.13,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், ஒரு சவரன் தங்கம் ரூ.2,400 குறைந்து ரூ.1,08,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.260 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,310-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தின் விலை குறைந்திருந்தாலும், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2,60,000-ஆக நீடிக்கிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)
| 10-6-2026 | 1,10,400 |
| 9-6-2026 | 1,13,600 |
| 8-6-2026 | 1,12,560 |
| 7-6-2026 | 1,13,600 |
| 6-6-2026 | 1,13,600 |
| 5-6-2026 | 1,15,440 |
| 4-6-2026 | 1,15,840 |
| 3-6-2026 | 1,16,000 |
| 2-6-2026 | 1,16,000 |
| 1-6-2026 | 1,16,000 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)
| 10-6-2026 | 260 |
| 9-6-2026 | 270 |
| 8-6-2026 | 270 |
| 7-6-2026 | 270 |
| 6-6-2026 | 280 |
| 5-6-2026 | 280 |
| 4-6-2026 | 285 |
| 3-6-2026 | 290 |
| 2-6-2026 | 290 |
| 1-6-2026 | 290 |
