நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்: கிடுகிடுவென சரிந்தது தங்கம், வெள்ளி விலை! இன்றைய நிலவரம் இதோ!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (ஜூன் 10) 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ. 3,200 குறைந்துள்ளது நகைப்பிரியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தங்கத்தின் தேவை உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 வரை குறைந்துள்ளது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.400 குறைந்து ரூ.13,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 3,200 குறைந்து ரூ.1,10,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ரூ. 350 குறைந்து ரூ.11,570க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 10 குறைந்து ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ. 2,60,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)
9-6-20261,13,600
8-6-20261,12,560
7-6-20261,13,600
6-6-20261,13,600
5-6-20261,15,440
4-6-20261,15,840
3-6-20261,16,000
2-6-20261,16,000
1-6-20261,16,000
31-5-20261,17,040

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

9-6-2026270
8-6-2026270
7-6-2026270
6-6-2026280
5-6-2026280
4-6-2026285
3-6-2026290
2-6-2026290
1-6-2026290
31-5-2026290
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share