தமிழக செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் இடமாற்றம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, நிர்வாக வசதிக்காக பல்வேறு துறைகளில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் 19 செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் (PRO) தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

  • கலை செல்வம் – சென்னை கலைவாணர் அரங்கம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருநெல்வேலி மாவட்டத்திற்கு இடமாற்றம்.
  • இள. பாண்டி – ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தேனி மாவட்டத்திற்கு இடமாற்றம்.
  • சாலி தளபதி – மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம்.
  • ராமச்சந்திர பிரபு – காஞ்சிபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், சென்னை கலைவாணர் அரங்கத்திற்கு இடமாற்றம்.
  • சுகுமார் – ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பூர் மாவட்டத்திற்கு இடமாற்றம்.
  • ஏ. எடிசன் – தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு இடமாற்றம்.
  • பிரபாகரன் – கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், அரியலூர் மாவட்டத்திற்கு இடமாற்றம்.
  • சதீஷ் குமார் – விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இடமாற்றம்.
  • க. சரவணன் – திருவண்ணாமலை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், கடலூர் மாவட்டத்திற்கு இடமாற்றம்.
  • ராஜா செல்வன் – சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல் மாவட்டத்திற்கு இடமாற்றம்.
  • வெற்றி வேந்தன் – விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், மதுரை மாவட்டத்திற்கு இடமாற்றம்.
  • கதிரவன் – வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், விழுப்புரம் மாவட்டத்திற்கு இடமாற்றம்.
  • சுரளி பிரபு – அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இடமாற்றம்.
  • கார்த்திகேயன் – மயிலாடுதுறை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இடமாற்றம்.
  • செல்வகுமார் – நாகப்பட்டினம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இடமாற்றம்.
  • அசோக் குமார் – ராணிப்பேட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம்.
  • நவீன் பாண்டியன் – தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தென்காசி மாவட்டத்திற்கு இடமாற்றம்.
  • பேச்சு முத்து – தருமபுரி TNSTC செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர் மாவட்டத்திற்கு இடமாற்றம்.
  • நாகராஜ பூபதி – கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், விருதுநகர் மாவட்டத்திற்கு இடமாற்றம்.

மொத்தமாக 19 அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் நாகை – மயிலாடுதுறை அலுவலர்கள் பரஸ்பரம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share