ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்கு நானும் பிரண்டும் டீ கடைக்கு போனோம். போனதுல இருந்து டீ கூட ஆர்டர் பன்னல ரீல்ஸ் பாத்துட்டே இருந்தான். என்ன டா.. கூட வந்த என்கூட பேசு, இல்லனா உனக்கு என்ன வேணும்னு சொல்லு ஆர்டர் பன்னுவோம்… வந்த வேலைய விட்டுட்டு ரீல்ஸே பாத்துட்டு இருந்தா எப்படிடானு கேட்டேன்.
அதுக்கு அவன் சொல்றான் ஆட்சியே ரீல்ஸ்லதான் நடத்துறாங்க. இப்ப ரீல்ஸ் பாக்கலனா எப்படி ஆட்சி நடக்கும்னு கேக்குறான். அய்யோயோ சரியான ரீல்ஸ் பைத்தியத்துக்கிட்ட மாட்டிகிட்டேனு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க

ArulrajArun
சென்னை, மதுரையில் இரக்கமே காட்டாத வெயில்
-தட் வெயில்; இரக்கம் காட்டுறதுக்கு நான் என்ன இயக்கமா நடத்திட்டு வர்றேன்…

படிக்காதவன்
என்னதான் பால் வெள்ளையாக இருந்தாலும்
அதை கிரீன் பால்’னுதான்
விற்பனை பண்றாங்க...

P.Gnana selvan
உனக்கு ஆறுதல் கூற வரும் நிறையப் பேர்,
உன் காயம் எவ்வளவு ஆழமானது என்பதை அளக்கவே வருகிறார்கள்.

ச ப் பா ணி
திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? வரும் 27ல் அறிவிப்போம்-துரை.வைகோ
~எப்பிடியும் தெரிஞ்சிடுச்சு. அதை எதுக்கு உருட்டிக்கிட்டு

செங்காந்தள்
செய்தி: நீட் மறுதேர்வு வினாத்தாள்களை கொண்டு செல்ல இந்திய ராணுவ உதவும்.
மானம் விமானம் ஏறிச்சிடுச்சு யாராவது சொல்லப் போறாங்க

கோழியின் கிறுக்கல்!!
எங்க ஊர்ல எப்ப மழை பெய்யும்னு வானிலை அறிக்கைலாம் பார்க்க தேவையில்லை,
என் கார் எப்பெல்லாம் Sevice போகுதோ அப்பெல்லாம் மழை பெய்யும்!!!

கோவிந்தராஜ்
கர்நாடகா CM – மேகதாதுவில் அணை கட்டுவேன் ஆயிரம் விஜய் வந்தாலும் தடுக்க முடியாது
அணில்ஸ் – அதுவாயா முக்கியம் இங்க பாருயா எங்க அண்ணன் அவரே வண்டி ஓட்டிட்டு வராரு

ArulrajArun
எதன் மூலம் தவெக வென்றதோ அதையே பயன்படுத்தி நாமும் வெல்வோம் – எடப்பாடி பழனிசாமி
-கண்ணாடியை திருப்பினா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும்…

லாக் ஆப்
