ADVERTISEMENT

அடுத்த 5 நாட்களுக்கு மழை!

Published On:

| By Jegadeesh

For the next 5 days it will rain

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், தமிழகத்தில் இன்று முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடமேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

ADVERTISEMENT

இதன் காரணமாக வருகிற 8 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழையும்,

ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

ADVERTISEMENT

இதனிடையே,  சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT

TN Rain Update | அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை தகவல் | Tamil Nadu News in Tamil

இன்று கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், நாளை முதல் 9 ஆம் தேதி வரையிலான நாட்களில் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் அளவிலும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் அளவிலும் வெப்பநிலை இருக்கும்.

செப்டம்பர் 8 ஆம் தேதி வரை தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளிலும்,

9 ஆம் தேதி வரையிலும் வங்கக்கடல் பகுதிகளிலும் சூறாவளி காற்று மணிக்கு 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கிச்சன் கீர்த்தனா: செட்டிநாட்டு சிக்கன் குழம்பு!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share