பிரதமர் இந்தோனேஷியா பயணம்!
20வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 18வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 6) இந்தோனேஷியா செல்கிறார்.
விஸ்வகர்மா யோஜனாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!
குலக்கல்வித் திட்டத்தின் மறுவடிவமான விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து திமுக, திராவிடர் கழகம், தமிழ்நாடு காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து சமூகநீதிக் கொள்கை சார்ந்த கட்சிகளும் ஒருங்கிணைந்து இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
காவிரி நீர் பங்கீடு விவகாரம்!
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பான தமிழ்நாடு அரசின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
கிருஷ்ண ஜெயந்தி!
நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மோட்டோ 5ஜி போன் அறிமுகம்!
நேற்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று 473வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.244-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
’மார்கழி திங்கள்’ டீசர்!
31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜா இளையராஜா கூட்டணியில் உருவாகியுள்ள ‘மார்கழி திங்கள்’ படத்தின் டீசரை இயக்குநர் மணிரத்னம் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார்.
சித்தா டீசர்!
நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘சித்தா’ படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.
ஆசிய கோப்பை!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் – பங்களாதேஷ் அணிகள் மோத உள்ளன.
கிச்சன் கீர்த்தனா: செட்டிநாட்டு சிக்கன் குழம்பு!
சனாதனம்… கனிமொழியைத் தொடர்புகொண்ட ராகுல்- பேசியது என்ன?