பழைய ஓய்வூதிய திட்டம் பரிசீலனையில் இருப்பதாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஜூன் 26) நிதி, மனித வள மேலாண்மை, ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுகால நன்மைகள் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்றது.
அப்போது நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஓய்வூதிய ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறது. இதுகுறித்த அரசின் கொள்கை முடிவு பரிசீலனையில் உள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “மத்திய – மாநில அரசுகளின் திட்டங்களுக்கு மத்திய பங்களிப்பு குறைந்து கொண்டே வருகிறது.
இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசால் எந்த நிதியும் ஒதுக்கப்படாததால் ரூ.12 ஆயிரம் கோடியை தமிழ்நாடு அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிதியை மத்திய அரசு வழங்கியிருந்தால் 25,000 புதிய பேருந்துகள் வாங்கி இருக்கலாம். 30.000 கிலோ மீட்டர் தூரம் கிராமங்களில் சாலைகள் அமைத்திருக்கலாம்.மூன்று லட்சம் வீடுகள் 50 ஆயிரம் வகுப்பறைகள் கட்டியிருக்கலாம்.
ஆனால் மத்திய அரசு தமிழக அரசுக்கு உரிய நிதி தராததால் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாத அளவுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்… இறுதி வேட்பாளர்கள் பட்டியல்!
செந்தில் பாலாஜி வழக்கு : 4 மாதங்களில் முடிக்க நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு!