விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட 26 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் ஜூலை 10அன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக ஜூன் 21ஆம் தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டன.
ஜூன் 24ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள், ஜூன் 26ஆம் தேதி வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாளாகும்.
மொத்தம் 55 ஆண்கள், 9 பெண்கள் என 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் கடைசி நாளான இன்று (ஜூன் 26)யாரும் வேட்புமனுவை திரும்ப பெறவில்லை.
அதே சமயம் இந்த 64 வேட்புமனுக்களில் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 29 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால் விக்கிரவாண்டியில் மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் போட்டியிட பாமக வேட்பாளருக்கு மாம்பழம் சின்னமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு மைக் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவு அறிவிக்கப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
செந்தில் பாலாஜி வழக்கு : 4 மாதங்களில் முடிக்க நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு!
“கல்கி 2898 AD” முதல்… – இந்த வார தியேட்டர், ஓடிடி ரிலீஸ் என்னனு கவனிங்க…