டிபிஐ வளாகத்துக்கு பேராசிரியர் பெயர்: முதல்வர் அறிவிப்பு!

Published On:

| By Prakash

”தமிழக பள்ளிக்கல்வித் துறை செயல்படும் டிபிஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகனின் பெயர் சூட்டப்படும்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரிச்சாலையில் பள்ளி கல்வித்துறை இயக்ககம்(டிபிஐ) இயங்கி வருகிறது.

ADVERTISEMENT

இங்கு, கல்வித்துறை சம்பந்தப்பட்ட அனைத்து ரகசிய கோப்புகள், நிதி, நிர்வாகம், டெண்டர் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை இயக்ககம்(டிபிஐ) இயங்கி வரும் கட்டடத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும் எனவும், அவரது பெயரில் சிறந்த பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படும் எனவும் தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள இன்றைய செய்திக்குறிப்பில்,

”தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவைப் போற்றும் வண்ணம்,

ADVERTISEMENT

பள்ளிக் கல்வித்துறையின் வளர்ச்சிக்கென ரூபாய் 7,500கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகனாரின் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற மாபெரும் திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டு,

நடப்பு ஆண்டிற்கு சுமார் ரூபாய் 1,400கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

அரசு எடுத்து வரும் பல்வேறு ஆசிரியர் மாணவர் நலன் சார்ந்த செயல்பாடுகளால் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து,

நடப்பு ஆண்டிலேயே பல்வேறு கட்டுமானத்திற்கும் மராமத்துப் பணிகளுக்கும் கூடுதலாக சுமார் 1,400கோடி ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்கள்.

இத்துடன், பேராசிரியர் அன்பழகன் அவர்களது நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் டிபிஐ வளாகத்தில்,

பேராசிரியர் அன்பழகன் திருவுருவச்சிலை நிறுவப்படுவதுடன் அவ்வளாகம் ’பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்’ என்றும் அழைக்கப்படும்.

மேலும் கற்றல் கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்குப் பேராசிரியர் பெயரில் விருதும் வழங்கப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெ.பிரகாஷ்

குஜராத் முதற்கட்ட தேர்தல்: நாளை வாக்குப்பதிவு!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ராமதாஸ் வலியுறுத்தல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share