}பேராசிரியர் அன்பழகன் பெயரில் கல்வித் திட்டம்!

politics

பேராசிரியர் அன்பழகன் பெயரில் சிறப்புக் கல்வித் திட்டம் தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

2022-23ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.

அவர் தனது உரையில், “உங்கள் தொகுதியில் முதல்வர், முதல்வரின் தனிப்பிரிவையும் இணைத்து முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமான மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன” என்றார்.

தமிழ் மொழியின் தொன்மையையும், செம்மையையும் நிலை நாட்டிடப் பிற உலக மொழிகளுடன் தமிழ் மொழியின் உறவு குறித்து அறிவியல்பூர்வமான ஆய்வு மேற்கொள்வது அவசியமாகும். தமிழ் மொழிக்கும் இந்து ஐரோப்பிய மொழி குடும்பத்துக்கும் இடையிலான உறவை வெளிக்கொணரும் வகையில் ‘அகர முதலி’ உருவாக்கும் திட்டத்திற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பெரியாரின் சிந்தனைகளையும் எழுத்துகளையும் எட்டுத்திக்கும் எடுத்துச் செல்வது இந்த அரசின் கடமை. எனவே தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 21 உலக, இந்திய மொழிகளில் பதிப்பிட 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்க ரூ.15 கோடி ஒதுக்கப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் உள்பட அனைத்து அரசுப் பள்ளிகள் நவீன மயமாக்கப்படும். இதற்காக பேராசிரியர் அன்பழகன் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 18,000 வகுப்புகள் கட்டப்படும். ஸ்மார்ட் கிளாஸ், அதிநவீன கணினி ஆய்வகங்கள் உருவாக்கப்படும். இது அடுத்து 5 ஆண்டுகளில் 7000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். முதற்கட்டமாக வரும் நிதியாண்டில் ரூ.1300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்றார்.

ஜிஎஸ்டி நிலுவையால் 20,000 கோடி இழப்பு ஏற்படும் என்றும் கூறினார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0