“முதலமைச்சருக்கு மட்டும்தான் உரிமை உள்ளதா?” – கைது செய்யப்பட்ட கார்த்திகா சரமாரி கேள்வி

Published On:

| By Pandeeswari Gurusamy

தாராபுரத்தில் நாம் தமிழர் வேட்பாளராக போட்டியிட்ட கார்த்திகா, அதிகாலையில் இரவு உடையில் என்னை கைது செய்துள்ளனர், நாங்கள் என்ன போதைப்பொருள் கடத்தினோமா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

தாராபுரம் நாதக வேட்பாளாரான கார்த்திகா மீது தேர்தல் பிரசாரத்தில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதல்வர் சென்ற பாதையில் பிரசாரம் மேற்கொண்டது, முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியது என 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், இன்று காலையில் கோவையில் உள்ள கார்த்திகாவின் இல்லத்திற்குச் சென்ற தாராபுரம் காவல் துறையினர் அவரையும் அவரது கணவரையும் கைது செய்துள்ளனர். மேலும் நாம் தமிழர் கட்சியினர் சிலரையும் கைது செய்தனர்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வரப்பட்ட போது செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் இறுதி பிரச்சார தினத்தன்று முதலமைச்சருக்கு மட்டும்தான் வாக்கு சேகரிக்க உரிமை உள்ளதா எங்களுக்கு வாக்கு சேகரிக்க உரிமை இல்லையா? இன்று அதிகாலையில் இரவு உடையில் என்னை கைது செய்துள்ளனர், நாங்கள் என்ன போதைப்பொருள் கடத்தினோமா? கோமாளி விஜய் ஆட்சி ஒழிக என கோஷம் எழுப்பினார். உடன் அங்கிருந்த நாதக நிர்வாகிகளும் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து தாராபுரம் அரசு மருத்துவமனை விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் உள்ளே கார்த்திகாவை அழைத்துச் சென்ற போலீசார் உடனடியாக மருத்துவமனை கதவுகளை அடைத்தனர்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share