பாஜக மாநில தலைவர் பதவியா? சரத்குமார் விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழக அரசு ஆறு மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளது. இப்போது அவர்கள் ‘ஹனிமூன் பீரியடில்’ உள்ளனர் என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை நிறுவிய நடிகர் சரத்குமார், கடந்த 2024-ஆம் ஆண்டு தனது கட்சியைப் பாஜகவுடன் இணைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

ADVERTISEMENT

இந்நிலையில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஊட்டி தொகுதியில் மட்டும் பாஜக வெற்றி பெற்றது. பாஜகவிலிருந்து அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் விலகிய நிலையில், மத்திய இணை அமைச்சராக இருந்த எல். முருகன் சமீபத்தில் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் கட்சி பணியாற்ற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, விரைவில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

ADVERTISEMENT

அப்போது, “பாஜக தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதா?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “அது போன்ற முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக என்னிடம் தெரிவிக்கப்படும் போது அது குறித்து கருத்து தெரிவிக்கிறேன். தற்போதைக்கு ஊடகங்களில் வெளியாகும் யூகங்களுக்குப் பதிலளிக்க முடியாது. கட்சித் தலைமை முடிவெடுத்த பின்பே அடுத்தகட்ட ரியாக்‌ஷன் இருக்கும்.” என்று அவர் பதிலளித்துள்ளார்.

மேலும், தமிழக அரசு குறித்த கேள்விக்கு, “தமிழக அரசு ஆறு மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளது. இப்போது அவர்கள் ‘ஹனிமூன் பீரியடில்’ உள்ளனர். நிர்வாகத்தில் என்ன நடக்கிறது, எப்படிச் செல்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். அது குறித்துக் கருத்துச் சொல்ல வேண்டிய இடத்தில் நான் இல்லை. மத்திய அமைச்சர், மாநிலத் தலைவர் உள்ளிட்ட ஏதாவது பொறுப்பில் இருந்தால் அரசு பற்றிக் கருத்துச் சொல்லலாம். அந்த அளவுக்கு ஆழமாக நான் பார்க்கவில்லை. புதிதாக வந்தவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

ADVERTISEMENT

முதல்வராக விஜய்யின் அணுகுமுறை குறித்த கேள்விக்கு, “அவர் மக்களை நேரடியாக சென்று பார்ப்பதில்லையே.. அவர் நிகழ்ச்சிகளுக்கு தான் செல்கிறார் என்றார்.

எல்.முருகன் குறித்த கேள்விக்கு, அவர் தனது பதவியில் இருந்து விலகி 2029ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சி பணியாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார். என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share