மாணவன் அகிலன் பெற்றோருக்கு கி.வீரமணி நேரில் ஆறுதல்

By Pandeeswari Gurusamy

|

Published on 5 Nov 2026, 10:18 PM

கோவை பீளமேட்டில் சாதிய வன்கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட மாணவன் அகிலனின் இல்லத்துக்கு நேரில் சென்ற திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.‌

கோவை பீளமேடு பகுதியில் உள்ள கே.கே.நாயுடு என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்த அகிலன் என்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவன் கடந்த 21ம் தேதியன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.“நீ எஸ்.சி.யா, மாட்டுக்கறி சாப்பிடுவீயா?” என வகுப்பறையில் கேட்டு ஆசிரியர் மற்றும் சக மாணவர்கள் இழிவுபடுத்தியதால் அகிலன் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் அதனால் மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோரும் முற்போக்கு அமைப்புகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மாணவனின் தற்கொலை தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கோவை பீளமேடு பகுதியில் உள்ள மாணவன் அகிலனின் வீட்டுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று நேரில் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த மாணவனின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அவர், மகனை இழந்து தவிக்கும் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel