முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெய்னுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 6) இரவு அங்கிருந்து சென்னை புறப்பட்டார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜனவரி 7ஆம் தேதி முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெய்ன் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.
இன்று ஸ்பெயின் நாட்டின் எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே ரோக்கா நிறுவனம் உள்ளிட்ட ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
Heading back to Tamil Nadu, I extend my heartfelt thanks to @IndiaInSpain for their coordination, Spain, its wonderful people, and our Tamil community for a treasure trove of memories!#Madrid pic.twitter.com/y2hZH0okZn
— M.K.Stalin (@mkstalin) February 6, 2024
இந்நிலையில் ஸ்பெய்ன் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று சென்னை புறப்பட்டார் ஸ்டாலின்.
இதுகுறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “மீண்டும் தமிழ்நாட்டுக்கு புறப்படுகிறேன்.
சிறப்பான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்ட ஸ்பெய்ன் இந்திய தூதரகத்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்பெய்னில் தமிழ் சமூகத்தினரை சந்தித்தது நினைவுகளின் பொக்கிஷமாக உள்ளது. மறக்க முடியாத நினைவுகளை ஸ்பெய்ன் மக்களும் அங்குள்ள தமிழர்களும் அளித்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…