நிவாரண பணிகளுக்கு மேலும் 4 அமைச்சர்கள் நியமனம்… நெல்லை விரைந்தார் உதயநிதி!

Published On:

| By Manjula

deputes ministers for south floods

நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நிவாரண பணிகளை விரைவுபடுத்த, 4 அமைச்சர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வரலாறு காணாத கனமழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித்தீர்த்து உள்ளது.

 

இதனால் அங்கு நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கி விடப்பட்டு இருக்கின்றன. தற்போது களத்தில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் அங்கு நிவாரண பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

அதோடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஞானதிரவியம் ஆகியோரும் மற்றும் பிற சட்டமன்ற உறுப்பினர்களும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மேற்கண்ட மாவட்டங்களுக்கு மேலும் 4 அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”நிவாரண பணிகளை துரிதப்படுத்தி  விரைவுப்படுத்த கூடுதலாக அமைச்சர்கள் எ.வ. வேலு,  உதயநிதி ஸ்டாலின், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், பி.மூர்த்தி ஆகிய அமைச்சர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நியமித்துள்ளார்,” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

21 செ.மீ-க்கு மேல் மழை பெய்தாலே ரெட் அலர்ட் தான்: பாலச்சந்திரன்

சபரிமலைக்கு போயிட்டு திருச்செந்தூருக்கு வராதீங்க… ’சாமிகளுக்கு’ எச்சரிக்கை! 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share