Don't come to Tiruchendur from sabarimala

சபரிமலைக்கு போயிட்டு திருச்செந்தூருக்கு வராதீங்க… ’சாமிகளுக்கு’ எச்சரிக்கை!

கார்த்திகை மாதம் சபரிசமலைக்கு சென்று அய்யப்பனை வழிபட்டு வரும் பக்தர்கள், அங்கிருந்து திரும்பும்போது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டி, கன்னியாகுமரி பகவதி அம்மன் உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று வழிபட்டுவிட்டுத் திரும்புவார்கள்.

இப்போதும் வழக்கம்போல சபரிமலைக்கு சென்ற பக்தர்களில் பலர் தங்கள் ஊருக்கு திரும்பும் வழியில் திருச்செந்தூருக்கு செல்ல முயற்சிக்கிறார்கள்.

ஆனால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் காரணமாக யாரும் திருசெந்தூர் பக்கம் வரவேண்டாம் என்று திருச்செந்தூரில் இருந்து வாட்ஸ் அப் மூலமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள் தன்னார்வலர்கள்.

”அனைத்து சொந்தங்களுக்கும் வணக்கம். தயவு செய்து யாரும் திருச்செந்தூருக்கு வராதீங்க. இதை அனைத்து மாவட்ட சொந்தங்களுக்கும் சொல்லுங்க. திருச்செந்தூர் நிலைமை தலைகீழா போயிட்டிருக்கு, இன்னும் ஒரு லட்சம் கன அடி தாமிரபரணியில தெறக்கப் போறாங்களாம். என்ன கண்டிஷன் ஆகப் போகுதுனு தெரியல. சபரிமலையில இருந்து திரும்புற நீங்க தயவு செஞ்சு ஊரப் பாக்க போங்க. திருச்செந்தூர் பக்கம் வந்துடாதீங்க.  உங்க வண்டிகளை காப்பாத்த முடியாது. இங்க மெக்கானிக் யாரும் இல்லை” என்று சாமிகளுக்காகவே அந்த வாட்ஸ் அப் குரல் பதிவில் எச்சரிக்கிறார்கள்.

திருச்செந்தூர் சுற்றியுள்ள அனைத்து சாலைகளும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன, திருச்செந்தூர் நகரத்தின் பல பகுதிகளும் வெள்ளத்தில் சிக்கியுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.  ஸ்ரீவைகுண்டம் -திருச்செந்தூர் சாலை வெள்ளத்தால் மூழ்கிவிட்டது. ஸ்ரீ வைகுண்டம், காயல்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகள் உச்ச பட்ச மழையை எதிர்கொண்டுள்ளன.  இந்த நிலையில்தான் ஏற்கனவே உள்ளூர் மக்கள் வெள்ளத்தால் தவிக்கும் நிலையில் வெளியூர் அய்யப்ப பக்தர்கள் திருச்செந்தூருக்கு வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர் தன்னார்வலர்கள்.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தொடரும் கனமழை: தென்மாவட்டங்களுக்கு பொது விடுமுறை!

தென் மாவட்டங்களில் அரசு இயந்திரம் குவிப்பு : முதல்வர் ஸ்டாலின்

 

 

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts