சென்னை கடற்கரை – சேப்பாக்கம் இடையே ரயில் சேவை தொடரும்!

Published On:

| By Monisha

Chennai Beach - Chepauk Flying Train Service

சென்னை கடற்கரை – சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவையை நிறுத்தி வைக்கும் திட்டத்தை கைவிட தெற்கு ரயில்வே முடிவு செய்து உள்ளது.

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூருக்கு நான்காவது ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

நான்காவது ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுவதையொட்டி சென்னை கடற்கரை – சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவை ஏழு மாதங்கள் நிறுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதற்கு பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ADVERTISEMENT

இந்த நிலையில் பயணிகளின் எதிர்ப்பை தொடர்ந்து சென்னை கடற்கரை – சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவையை நிறுத்தும் திட்டம் கைவிடப்படுகிறது.

பயணிகளுக்கு பாதிப்பு இல்லாமல் நான்காவது ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள ரயில்வே அதிகாரி ஒருவர்,

ADVERTISEMENT

“சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூருக்கு நான்காவது ரயில் பாதை அமைக்கப்படுவதையொட்டி,

சென்னை கடற்கரை- சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவையை ஏழு மாதங்கள் நிறுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

எனவே இதுபற்றி முடிவு எடுக்க அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி சென்னை கடற்கரை – சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவையை நிறுத்தி வைக்கும் திட்டத்தை கைவிட தெற்கு ரயில்வே முடிவு செய்து உள்ளது. இதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இதற்கான முறையான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும். சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் மற்றும் போக்குவரத்து செயலாளருடன் கலந்தாலோசித்து புதிய திட்டத்தை இறுதி செய்து வருகிறோம்.

இந்த வார இறுதிக்குள் புதிய திட்டம் தயாராகிவிடும். சென்னை கோட்ட உயரதிகாரிகளின் கருத்துகளை பெற்று பறக்கும் ரயில் சேவையை பாதிக்காத வகையில் நான்காவது ரயில் பாதை அமைக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ராஜ்

தென்மேற்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தேசிய விளையாட்டு போட்டிகள்: பங்கேற்காத தமிழக மாணவர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share