செள செள காய்கறியில் இவ்வளவு சத்துக்களா?.. சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் லிஸ்ட்!

Published On:

| By Santhosh Raj Saravanan

Chayote Chow Chow nutrients and its health benefits weight loss

செள செள காய்கறியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் (Chow Chow Nutrients), அதனை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்துப் பார்க்கலாம்.

அனைவருக்கும் தினமும் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். குறிப்பாக உடல் எடையை குறைக்க விரும்புவோர் நார்ச்சத்து, நீர்ச்சத்துள்ள காய்கறிகளையே விரும்புகிறார்கள். அப்படி உங்கள் உணவில் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒரு காய்கறியைச் சேர்க்க விரும்பினால் செள செள-வை நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம். பார்ப்பதற்கு எளிமையானதாகத் தோன்றும் செள செளவில் நார்ச்சத்து (Fibrous vegetable), வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, செள செள சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்துப் பார்க்கலாம்.

ADVERTISEMENT
உடல் எடையை குறைக்க உதவுகிறது

செள செளவில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தர உதவுகிறது. இது பசியைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்கவும் உதவும். செள செளவில் கலோரிகள் (Chow Chow For weight loss) குறைவாக இருப்பதால் உடற்பயிற்சி செய்பவர்கள் இதைத் தங்கள் உணவில் எளிதாகச் சேர்த்துக்கொள்ளலாம். மொத்தத்தில் இது உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கவும் உதவிபுரிகிறது.

மலச்சிக்கலை போக்க உதவுகிறது

ஆரோக்கியமான செரிமான அமைப்பைப் பராமரிப்பதிலும் செளசெள (chayote benefits) முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கவும், குடலைச் சுத்தப்படுத்தவும், நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவிக்கவும் உதவுகிறது. மேலும், இதில் உள்ள வைட்டமின் சி சருமத்திற்கும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது, ஏனெனில் இது சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும் கொலாஜன் உருவாவதற்கு உதவுகிறது.

ADVERTISEMENT
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது

செள செள காய்கறி இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராகப் பராமரிக்க உதவுகிறது, அதே நேரத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் (ldl cholesterol) விளைவுகளைக் குறைக்க உதவுகின்றன. இது இதயம் தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்க உதவும்.

கர்ப்பிணிகளுக்கு நன்மை அளிக்கும் செள செள

செள செளவில் உள்ள ஃபோலேட் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒரு முக்கியமான ஊட்டச்சத்தாகும். ஏனெனில் இது கருவின் இயல்பான வளர்ச்சிக்கு உதவுகிறது. இதன் குறைந்த கிளைசெமிக் தாக்கமும் நார்ச்சத்தும் ரத்த சர்க்கரை (Blood sugar control) அளவை சீராக்க உதவும். இதை வேகவைத்தோ, காய்கறியாகவோ, சூப்பாகவோ அல்லது சாலடாகவோ எளிதாக உண்ணலாம். இந்தக் காய்கறி பார்ப்பதற்கு ஒரு சுரைக்காயைப் போலவே இருக்கும். சுரைக்காய் போலவே இதன் நன்மைகளும் என்னற்றதாக உள்ளது. ஆகவே, உங்களுடைய அத்தியாவசிய காய்கறிகள் லிஸ்டில் செள செளவையும் சேர்த்துவிடுங்கள்.

ADVERTISEMENT
Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share