+2 ரிசல்ட்… அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் எவ்வளவு? மறுகூட்டல் எப்போது?

Published On:

| By Kavi

2023-24 ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ்2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 6) வெளியிடப்பட்டது.

இந்த தேர்வை 4,08,440 மாணவிகள், 3,52,165 மாணவர்கள் என மொத்தம் 7,60,606 பேர் எழுதினர்.

இதில் 7,19,196 (94.56 %) சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்களில் மாணவிகள் 3,93,890 (96.44%) பேரும், மாணவர்கள் 3,25,305 (92.37%) பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் கூடுதலாக 4.07 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2023ஆம் ஆண்டில் 8,03,385 மாணவர்கள் தேர்வு எழுதி 7,55,451 (94.03% ) பேர் தேர்ச்சி பெற்றனர். அதன்படி கடந்த பொதுத்தேர்வை காட்டிலும் இந்த தேர்வில் 0.50 சதவிகித மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2024 பிளஸ் 2 பொதுத் தேர்வில் 7532 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இதில் 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 2478.

100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை -397.

பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

அரசுப் பள்ளிகள்- 91.02%
அரசு உதவி பெறும் பள்ளிகள் – 95.49%
தனியார் சுயநிதிப் பள்ளிகள்- 98.70%
இருபாலர் பள்ளிகள்- 94.78%
பெண்கள் பள்ளிகள்- 96.39%
ஆண்கள் பள்ளிகள்- 88.98%

முக்கிய பாடங்களின் தேர்ச்சி விகிதம்

இயற்பியல்- 98.48%
வேதியியல்- 99.14%
உயிரியல்- 99.35%
கணிதம்- 98.57%
தாவரவியல்- 98.86%
விலங்கியல்- 99.04%
கணினி அறிவியல்- 99.80%
வணிகவியல்- 97.77%
கணக்குப் பதிவியல்- 96.61%
அறிவியல் பாடப் பிரிவுகள் – 96.35%
வணிகவியல் பாடப் பிரிவுகள் – 92.46%
கலைப் பிரிவுகள் – 85.67%
தொழிற்பாடப் பிரிவுகள் – 85.85%

தேர்வெழுதிய மாற்றுத்திறனாளி மாணாக்கர்களின் எண்ணிக்கை 5603. இதில், தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 5161 (92.11%)

தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 125. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 115 (92%).

மாணவர்கள் தங்களின் மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொண்ட பின்னர் மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீடு செய்வதற்கு நாளை (மே 7) முதல்  விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வழியாகவோ அல்லது பள்ளிகள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள் துணைத் தேர்வு எழுதவும் ஏற்பாடு செய்யப்படுகிறது என்று பள்ளிக் கல்வித் துறை கூறியுள்ளது.

சென்னை மாநகராட்சி பள்ளிகள்…

சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் 206 தொடக்கப்பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் உள்ளன.

இந்த பள்ளிகளில் இருந்து 2023-24ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவிகள் என மொத்தம் 4,998 பேர் தேர்வு எழுதினர்.

இதில் 1,750 மாணவர்கள் (81.78%) மற்றும் 2,605 (91.15%) மாணவியர் என மொத்தம் 4,355 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 87.13% ஆகும். கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் 86.86%. அதன்படி சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 0.27 % தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

சாதிவெறிக்கு எதிரான வெற்றி : நாங்குநேரி சின்னதுரைக்கு குவியும் பாராட்டு!

பாஜகவின் 200 கோடி நெட்வொர்க்…நயினாரின் 4 கோடி விவகாரம்…அம்பலமாகும் வாக்குமூலம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share