தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் நாளை புத்தாண்டைக் கொண்டாடும்நிலையில், “பேசும் மொழியால் அவர்கள் வேறுபட்டிருந்தாலும் வாழும் இடத்தால் ஒற்றுமை உணர்வுடன் வாழ்வது பெருமை அளிக்கிறது. எல்லா வளமும், நலமும் பெற்றுவாழ எனது யுகாதி வாழ்த்துகள்” என்று, தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதேபோல், திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தெலுங்கும் கன்னடமும் திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியான தமிழுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை அத்தகைய மொழியான தெலுங்கு, கன்னடம் மொழி பேசும் மக்கள் யுகாதி திருநாளை கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு எனது யுகாதி வாழ்த்துக்கள் என்றார்.









