வரும் 2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்க ஜப்பான் அணி முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.. World Cup 2026: Japan qualified
2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து அமெரிக்கா, கனடா, மெக்சிகோ என 3 நாடுகளில் நடைபெறுகிறது. முதன்முறையாக 48 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன.
போட்டியை நடத்தும், அமெரிக்கா, கனடா , மெக்சிகோ ஆகிய நாடுகள் தானாகவே தகுதி பெற்று விடும்.
மற்ற 45 அணிகள் உலகக் கோப்பை தகுதி சுற்று ஆட்டங்களில் பங்கேற்று உலகக் கோப்பைக்கு தகுதி பெற வேண்டும். அந்த வகையில், உலகக் கோப்பை தொடருக்கு முதன்முறையாக ஜப்பான் அணி தகுதி பெற்றுள்ளது.
ஆசிய தகுதி சுற்றில் சி பிரிவில் இடம் பெற்றிருந்த ஜப்பான் அணி சைதமா நகரில் பக்ரைன் அணியுடன் மோதியது.
இந்த போட்டியில் 2- 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து, சி பிரிவில் ஜப்பான் அணி முதலிடம் பிடித்து உலகக் கோப்பைக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. World Cup 2026:
ஜப்பான் அணி தொடர்ச்சியாக 8வது முறையாக உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.