கமலை மன்னிப்புக் கேட்க சொல்வதை விட, கன்னடத்துக்கும், தமிழுக்கும் சம்பந்தமே இல்லை என நிரூபித்து அதன்பின்னர் நீதிபதி தீர்ப்பளிக்கட்டும் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். will judge prove tamil kannada dont have any link – seeman
கன்னட மொழி குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையான நிலையில், அவரின் தக் லைஃப் திரைப்பட ரிலீஸுக்கு தடைவிதிக்கப்பட்டது. இதற்கு எதிராக கமல் தாக்கல் மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், மன்னிப்பு கேட்கும்படி கெடு விதித்தது.
எனினும் ’தவறு செய்தால் மட்டுமே மன்னிப்பு கேட்க வேண்டும், தவறாக புரிந்து கொண்டதற்கு எப்படி மன்னிப்பு கேட்க முடியும்?’ என்றதோடு, என தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க கமல்ஹாசன் நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்தார்.
இதனையடுத்து கர்நாடகாவில் தக் லைஃப் படம் வரும் 5ஆம் தேதி வெளியாகாது என்று உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை ஜூன் 10ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
சித்தராமையாதான் வரலாறு படிக்க வேண்டும்! will judge prove tamil kannada dont have any link – seeman
அதற்கு அவர், “கன்னட மொழி குறித்து கமல் தவறாக கூறவில்லை, வாய்க்கு வந்ததை அவர் கூறவில்லை. நம் முன்னோர்கள் கூறியதை தான் பேசியிருக்கிறார். எந்த வரலாற்று ஆய்வாளர்களும் இதை மறுக்க முடியாது. இந்திய நாட்டின் ஆட்சி மொழியாக மூத்த மொழியான தமிழ் தான் வரவேண்டும் என காயிதே மில்லத் கூறியது வரலாற்றில் உள்ளது. பிரதமர் மோடி தமிழை தொன்மை மொழி என பகிரங்கமாக பேசி வருகிறார்.
திராவிட மொழிகளின் தாய் தமிழ் என அனைவருக்கும் தெரியும். எனவே கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியதில் எந்த தவறும் இல்லை. பணமா, இனமா என்பதில் இனமே முக்கியம்.
63 நாயன்மார்கள் அல்லது ஆழ்வார்களில் யாரேனும் கன்னடர்கள் உள்ளனரா? மொழி ஆய்வாளர்கள் கூற்றைதானே கமல் பேசியுள்ளார், அவர் பேச்சில் தவறில்லை. வரலாற்றை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் கமல் படத்திற்கு தடை விதித்துள்ளனர்.
தமிழர்கள் தங்களது வரலாற்றை சொல்வது போல, கன்னடர்கள் தங்கள் வரலாற்றை பேசி நிரூபிக்கலாமே? வரலாற்றை படித்தவர் கமல், சித்தராமையாதான் வரலாற்றை படிக்க வேண்டும்.
கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி கமல் வழக்கில் தீர்ப்பு தான் சொல்ல வேண்டும். அதை விடுத்து நாட்டாமை போன்று பஞ்சாயத்து பண்ணக்கூடாது. அது நீதிபதியின் வேலை அல்ல. முடிந்தால் கன்னடத்துக்கும், தமிழுக்கும் சம்பந்தமே இல்லை என நிரூபித்து நீதிபதி தீர்ப்பளிக்கட்டுமே….
தமிழில் இருந்து கன்னடம் வந்தது என்ற உண்மையை ஏற்பதில் உங்களுக்கு என்ன ஈகோ? என்ன பிரச்சனை?
கேஜிஎஃப், காந்தாரா உள்ளிட்ட கன்னடப் படங்கள் தமிழகத்தில் இடையூறின்றி ஓடி பல நூறு கோடிகள் வசூல் குவித்தன. அதற்கெல்லாம் தமிழர்கள் எந்த பிரச்சனையும் செய்யவில்லை.
கமலை மன்னிப்பு கேட்க சொல்வது தனி மனித பிரச்சனை அல்ல, ஒரு இனத்தின் பிரச்சனை” என சீமான் தெரிவித்துள்ளார். will judge prove tamil kannada dont have any link – seeman