விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாதது ஏன்? விளக்கமளிக்கும் ரிசர்வ் வங்கி!

Published On:

| By Minnambalam

இந்தியாவில் செப்டம்பர் மாதம் சில்லறை பணவீக்கம் 7.41 சதவிகிதமாக அதிகரித்துள்ள நிலையில் இந்த உயர்வுக்கான காரணம், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாதது ஏன், விலைவாசியைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஒன்றிய அரசுக்கு ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்க உள்ளது. 

இந்தியாவில் செப்டம்பர் மாதத்துக்கான நுகர்வோர் விலை குறியீட்டை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டது.

ADVERTISEMENT

அதில், இந்தியாவில் செப்டம்பர் மாதம் சில்லறை பணவீக்கம் 7.41 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் விலைவாசி உயர்வு அதிகரித்து வருகிறது.

சில்லறை பணவீக்கம் 2 முதல் 6 சதவிகிதமாக இருக்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் பணியாகும்.

ADVERTISEMENT

2016ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை கட்டமைப்பு சில்லறை பணவீக்கத்தை ரிசர்வ் வங்கி கட்டுக்குள் வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கிறது.

அவ்வாறு தொடர்ந்து மூன்று காலாண்டுகள் (9 மாதங்கள்) பணவீக்கம் கட்டுக்குள் இல்லை என்றால் இதுகுறித்து உரிய விளக்கத்தை ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

ADVERTISEMENT

அதேவேளை, செப்டம்பர் மாதம் நுகர்வோர் சில்லறை பணவீக்கம் 7.41 சதவிகிதமாக அதிகரித்துள்ள நிலையில் பணவீக்கம் தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக சில்லறை பணவீக்கம் ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட பணவீக்க அளவான 6.0 விட அதிகமாக உள்ளது.

இந்த நிலையில், 2016ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை கட்டமைப்பு அடிப்படையில் தொடர்ந்து ஒன்பது மாதங்களாக பணவீக்கம் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 6.0 விட அதிகமாக உள்ளதால் இதுகுறித்து மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்க உள்ளது.

பணவீக்கத்தை நிர்ணயிக்கப்பட்ட 6.0 என்ற அளவுக்குள் கட்டுக்குள் வைக்காததற்கான காரணம், விலைவாசி உயர்வுக்கான காரணம்,

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாதது ஏன், விலைவாசியை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஒன்றிய அரசுக்கு ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்க உள்ளது.  

-ராஜ்

ஓசி பேருந்து: அமைச்சர் பொன்முடி வருத்தம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share