சமையல் எரிவாயு, பெட்ரோல், விலைவாசிஉயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.
பாரதிய ஜனதா மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சமையல் எரிவாயு, பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் குற்றம் சாட்டியுள்ளனர்.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும் மின்சார திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த அக்கட்சியினர் முடிவு செய்தனர்.
அதன்படி இன்று (ஆகஸ்ட் 30) சென்னை, அண்ணா சாலை தலைமை தபால் அலுவலகம் முன்பு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
அவர்களை கலைக்க முயன்றபோது காவல்துறைக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீஸ் கைது செய்தது.
இதேபோன்று பெட்ரோல், டீசல் மற்றுூம விலைவாசி உயர்வைக் கண்டித்து ஆம்பூர், தஞ்சாவூர், நெல்லை உள்ளிட்ட இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் அவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறை குண்டுக்கட்டாக கைது செய்தது.
கலை.ரா
ஸ்ரீமதி மரணம்: மின்னம்பலம் புலனாய்வை உறுதிப்படுத்திய உயர் நீதிமன்றம்!