கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தேவர் சிலை பூசாரி பெருமாயி இன்று (அக்டோபர் 12 ) காலமானார்.
மதுரை கோரிப்பாளையம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலையை பராமரித்து 10 ஆண்டுகளுக்கு மேலாக பூஜை நடத்திவந்த மூதாட்டி பெருமாயி வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், அவருடைய உடலானது தத்தநேரி பொழுது பகுதியில் இருக்கக்கூடிய மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், பெருமாயி அம்மாள் இறப்பிற்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (அக்டோபர் 12 ) அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் , “மதுரை கோரிப்பாளையம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயாவின் திருவுருவ சிலையை பல ஆண்டுகளாக சுத்தம் செய்து, விளக்கேற்றி, பூஜை செய்து வந்த பெருமாயி அம்மாள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.
ஒவ்வொரு தேவர் ஜெயந்தியின் போதும், கோரிப்பாளையம் வைகை வடகரையில், நெற்றி நிறைய திருநீறோடு நின்றுகொண்டு தேவர் திருமகனாரை தரிசிக்க வரும் அனைவருக்கும், திலகமிடும் பெருமாயி அம்மாளை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
பூசாரி பெருமாயி அம்மாளின் ஆன்மா தேவர் திருமகனாரின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அண்ணாமலை ஆடு மேய்க்க தான் போகணும்: மநீம கண்டனம்!
2023 விடுமுறை தினங்கள்: தமிழக அரசு அறிவிப்பு!