தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை யாரும் எளிதில் சந்திக்கமுடியாது என்று அரசியல் வட்டாரத்தில் விமர்சனம் உள்ளது.
இந்நிலையில், நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட மத்திய மரபுசாரா எரிசக்தித்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக மின்திட்டப் பணிகளுக்காக தமிழக முதலமைச்சரைத் தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை என்று, பேசிய வாட்ஸ் அப் வீடியோ வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘‘மத்திய அமைச்சர் தமிழகத்தின் மின்திட்டப் பணிகளுக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். மாநில முதல்வர் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்துப் பேசினால்தானே தமிழகத்தின் தேவை நிறைவேறும். திரைமறைவில் வாழ்ந்துகொண்டிருந்தால் எப்படி தமிழத்தின் நிலை உயரும். மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு ஜெயலலிதாவின் விளக்கம் என்ன?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.