பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அமெரிக்காவின் ஆலன் அண்ட் மில்லர் நிறுவனமும், நேச்சர்ஸ் வாட்ச்டாக் என்ற நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் முக்கியப் பிரச்னைகள் பற்றியும், அதில் மக்களின் நிலைப்பாடுகள் குறித்தும் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இது, தமிழகத்தில் மாற்றம் ஏற்படப்போவதை உணர்த்துகின்றன. மது ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் கல்வி, சுகாதாரம், விவசாயத்துக்கான இடுபொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று பாமக கூறிவருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் ஆதரவு உள்ளது. தமிழகத்தில் மது ஒழிப்புதான் இன்று முக்கியப் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. மதுவை யாரால் ஒழிக்கமுடியும் என்ற வினாவுக்கு 56.60 விழுக்காட்டினர் பாமக-வால்தான் முடியும் என்று விடையளித்துள்ளனர். இதன்மூலம், பாமக-வுக்கு வடமாவட்டங்களில் மட்டும்தான் செல்வாக்கு என்ற கருத்து முறியடிக்கப்பட்டு, தென்மாவட்டங்களிலும் பாமக-மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மது ஒழிப்பு எங்களால்தான் சாத்தியம்: ராமதாஸ்
By Balaji
|
Published on 12 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








