ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆர்.சி.பி. virat fifty helps rcb win by 9 wickets
ஜெய்ப்பூரில் இன்று (ஏப்ரல் 13) மதியம் 3.30 மணிக்கு துவங்கிய ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொண்டது ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசியது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
மறுபுறம் பவுண்டரிகளை பறக்கவிட்ட ஜெய்ஸ்வால் அரைசதம் (75) கடந்து ஆட்டமிழந்தார். அவருக்கு உறுதுணையாக ரியான் பராக் 30 மற்றும் துருவ் ஜுரேல் அதிரடியான 35 ரன்கள் எடுத்து கை கொடுத்தனர்.
இதனால் 20 ஓவரில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது.

பெங்களூரு அணி தரப்பில் ஹேசல்வுட், குர்னால் பாண்டியா, யாஷ் தயாள், புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து விளையாடிய பெங்களூரு அணிக்கு பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் நல்ல துவக்கம் தந்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் குவித்தனர்.
அதிரடியாக ஆடி வந்த பில்சால்ட் 5 பவுண்டரி 6 சிக்ஸருடன் 65 ரன்களில் ஆட்டமிந்தார்.

அதில், அவருடன் இணைந்து விளையாடிய விராட் கோலியும் அரை சதத்தை அடித்து 62* ரன்கள் குவித்து அசத்தினார். இதன்மூலம் டி20 கேரியரில் 100வது அரைசதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
அதே போன்று படிக்கலும் 40 ரன்கள் அடிக்க, 17.3 ஓவரிலேயே 175 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.