ஆன்லைன் விஜய் ஃபேன்ஸ் கிளப் தலைவருக்கு அரசு பதவி!

Published On:

| By Mathi

Vijay fan club head gets TN Govt. post

ஆன்லைன் விஜய் ஃபேன்ஸ் கிளப் (Online Thalapathy Fans Club) தலைவருக்கு தமிழ்நாடு அரசு பதவி வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.

திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு அரசின் Fact Check Unit என்பது தற்போதைய தவெக ஆட்சியில் Information Integrity Desk – IID என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் தலைவராக Online Thalapathy Fans Club தலைவரான குரு என்ற @Guru Thalaiva நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அத்துடன் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையான DIPR-ன் கீழ் இயங்கும் சமூக வலைதளப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக, த.வெ.க. ஐ.டி. விங் ஒருங்கிணைப்பாளர் திவ்யா நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முந்தைய திமுக ஆட்சியில் Fact Check Unit தலைவராக YouTurn இணையதளத்தின் அயன் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டிருந்தார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share