இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அப்போ வீர தீர சூரன் பார்க்க தியேட்டருக்கு போறேன்னு சொன்ன நண்பர், எனக்கு முன்னாடி டீக்குடிச்சிட்டு இருந்தாரு.
’என்னய்யா படம் பாக்க போகலயா?’னு கேட்டேன். அதுக்கு அவரு, “அட போனம்பா… அங்க போன பிறகு தான் தெரிஞ்சது… அது பார்ட் 2 வாம். அதான் பார்ட் 1 பாத்துட்டு வந்துடுலாம்’னு படம் பாக்காமலே வந்துட்டேன்…. சரி அந்த பார்ட் 1 எந்த ஒடிடில வந்துருக்கு”னு கேட்டாரு..
என்னடா இது விக்ரமுக்கு வந்த சோதனை’னு அங்க இருந்து கெளம்பி வந்துட்டேன். update kumaru memes trolls march 30
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes trolls march 30

ச ப் பா ணி
பத்து ரீல்ஸ் பார்த்த பிறகு என்ன வந்திருக்கும்?
Alert 50%: data is consumed. Get 2GB at Rs33 till Midnight. Recharge now மெசேஜ் வந்திருக்கும்

டேவிட்
எதுக்கும் வளைஞ்சு குடுக்காம எப்பவும் நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமா இருக்கறவங்க யார் தெரியுமா..?
தெரியலயேப்பா.. யாரு அஜித் ரசிகர்களா..?
அதான் கிடையாது, முதுகு வலி வந்து அவதிப்படறவங்க..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
மேட்ச் ஆரம்பிக்கும் போது சிஎஸ்கே ஜெயிக்க 49.5% இருந்த வாய்ப்பு ரெண்டே ஓவர்ல 25% க்கு வந்துருச்சு..
அதுல பாருங்க ஆரம்பத்துல எப்படி 49.5% இருந்துச்சுன்னு தான் எனக்கு புரியல..

வருண்
மகளார்: சன் டே அன்னிக்கு ஏம்ப்பா சோகமா இருக்கீங்க
Me: மட்டன் வெட்டும் போது போன் பேசிட்டு இருந்தேன். இதான் சமயம்னு கறிக்கடைக்காரர் எலும்பா வச்சி கொடுத்திட்டார். உங்க அம்மா இன்னிக்கு சாமி ஆடிட்டா

கடைநிலை ஊழியன்
நாங்க ரன் அடிக்குறத தடுக்கலாம்..
ஆனா, நாங்க ஓவர் ‘ர waste பண்றத தடுக்க முடியாது..
இப்படிக்கு டீம் சிஎஸ்கே

Suyanalavaathi
ஒன்னுல வச்சும், fan speed ‘டா ஓடுனா, அது குளிர்காலம்..
அதே fan ‘ன அஞ்சுல வச்சும், slow வா ஓடுனா, அது வெயில்காலம் !!

✒️Writer SJB✒️
மச்சான் அவள ப்ரொபோஸ் பண்ணவே பயமா இருக்குடா ஒரு நல்ல ஐடியா இருந்தா கொடுடா,,
ஏப்ரல் ஒன்னாம் தேதி அவ கிட்ட போய் ப்ரொபோஸ் பண்ணு அவ முறைச்சா ஏப்ரல் fool பண்ணேன்னு சொல்லி சிரிச்சிடு அவ சிரிச்சா உன் ரூட்டு கிளியர்..!
