’ஒரே அவமானமா போச்சு குமாரு’ – அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க ஒருத்தர் புதுசா இருந்தாரு.. டீக்குடிச்சிக்கிட்டே… “வழக்கமா அந்த டீக்கடைலதான் டீ குடிப்பேன். ஆனா அங்க டீ மாஸ்டர் நல்லாவே டீ போட மாட்டாரு, டீ குடிச்சா காசு குடுத்துட்டு போ’னு அதட்டி சொல்றாரு. அதான் அங்கிருந்து இந்த கடைக்கு வந்துட்டேன்”னு சொன்னாரு.

அத கேட்டுட்டு இருந்த டீ மாஸ்டர், “அடப்பாவி நீ இங்கேயும் வந்துட்டியா… மாசக்கணக்குல குடிச்ச டீக்கு காசு தராம எஸ்கேப் ஆயிட்டு, இங்கே வந்து என் முன்னாடியே என்னயவே திட்டுறியா?’னு காண்டாயிட்டாரு.

’அய்யோ இப்படி மாட்டிக்கிட்டோமே’னு குடிச்ச டீக்கு காச வச்சிட்டு அப்படியே சத்தமில்லாம அங்கிருந்து எஸ்கேப் ஆயிட்டாரு. update kumaru memes and trolls may 22

நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls may 22

கிச்சா

Tourist Family Reviews: அது எப்டி ஒரு படத்துல எல்லாரும் நல்லவங்களா இருப்பாங்க.

அதான் பாக்குற நீ படுபாவியா இருக்கியேடா அது போதாதா

Black cat

பாவம் இல்லையா ரவி ,அவர் கிட்ட போய் 40 L கேக்குறாங்க ஆர்த்தி..

பாஸ் நமக்கு வாங்குன சம்பளம் 20 தேதி யோட முடிவு போச்சு மிச்ச 10 நாள் எப்பிடி ஓட்றதுன்னே தெரியல இதுல 40 லட்சம் பஞ்சாயத்து தேவதானா..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க போவதாக வதந்திகளை கிளப்புகின்றனர்” – பாமக நிறுவனர் ராமதாஸ்

யாரு கிளப்பறா..?

வேற யாரு..? நான் தான்..

ArulrajArun

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்பது போல தான்

இப்போது திரைத்துறையில் நடக்கும் திருமணமும் விவாகரத்தும்

mohanram.ko

ஏம்மா, கல்யாணமே இப்ப தான் ஆகுது… அதுக்குள்ளே டைவர்ஸ் எப்போ கிடைக்கும், ஜீவனாம்சம் எப்போ கிடைக்கும்னு கேட்கறீயே… சேர்ந்து வாழணும்னு கொஞ்சம் கூட எண்ணமில்லையா…

வாசுகி

அமலாக்கத்துறையின் சோதனைக்கும், மத்திய அரசுக்கும் தொடர்பில்லை – எல்.முருகன்

கத்தாதீங்க, நீங்களே காட்டி கொடுத்துடுவீங்க போல

ச ப் பா ணி

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் – மீண்டும் மீண்டும் பேசிவரும் ட்ரம்ப்

’டிரம்ப் இதெல்லாம் சரியில்ல… ரொம்ப தப்பு’னு ஜி சொல்வாருனு நானும் பாக்குறேன்… சொல்லமாட்டேங்குறாரே…

Sasikumar J

மனைவி கங்கவா இருந்து சந்திரமுகியா மாறுவதும்,

கணவன் பாட்ஷாவா இருந்து மாணிக்கமா மாறி வருவது தான்

கல்யாண வாழ்க்கை…!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share