எல்லாம் லைக்ஸ், ஷேருக்காகவா? 19 வயது இளைஞரை கொன்ற இரண்டு சிறுவர்கள்… அதிர வைக்கும் கொலை பின்னணி!

By christopher

|

Published on 29 Jun 2025, 5:13 PM

two minor killed a youngster for making HD reels

இந்தியாவில் ரீல்ஸ் மோகம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. அதில் வரும் லைக்ஸ் ஷேருக்காக எந்த எல்லைக்கும் செல்ல பலர் தயாராக உள்ளனர். two minor killed a youngster for making HD reels

இந்த நிலையில் HD தரத்தில் ரீல்ஸ்களை உருவாக்குவதற்காக, ஒரு இளைஞரை கொடூரமாக கொன்று, அவரிடமிருந்த ஐபோனை இரண்டு சிறுவர்கள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

பெங்களுரூவைச் சேர்ந்தவர் ஷதாப் (19) இவர் தனது தாய் மாமாவின் திருமணத்திற்காக உத்தரபிரதேசம் பஹ்ரைச்சில் உள்ள தனது சொந்த கிராமமான நாகூருக்கு கடந்த 20ஆம் தேதி சென்றிருந்தார்.

ஆனால் அதற்கு மறுநாளே அவர் காணாமல் போனதாக உறவினர்கள் தேஹாட் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக விசாரணையைத் தொடங்கிய போலீசார், காணாமல் போன ஷதாப்பின் உடலை கிராமத்திற்கு வெளியே உள்ள ஒரு கொய்யாத் தோட்டத்தில் உள்ள ஒரு பாழடைந்த குழாய் கிணற்றுக்கு அருகில் கண்டுபிடித்தனர். அப்போது கழுத்து அறுக்கப்பட்டு, கல்லால் தலை நசுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதற்கிடையே தொடர்ந்து விசாரித்து வந்த போலீசார் சந்தேகத்தின் பேரில், அதே ஊரைச் சேர்ந்த 14 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்களை கடந்த 16ஆம் தேதி அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் தாங்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

அவர்கள் கடந்த 20ஆம் தேதி இரவு, ரீல்ஸ் உருவாக்குவதாகக் கூறி ஷதாப்பை கிராமத்திற்கு வெளியே உள்ள ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்றதும், அங்கு அவரைத் தாக்கி, கழுத்தை அறுத்து, பின்னர் அவரது தலையை ஒரு செங்கலால் அடித்து நசுக்கி கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சிறுவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமானந்த் பிரசாத் குஷ்வாஹா நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த கொலையை சிறுவர்கள் நான்கு நாட்களுக்கு முன்பாகவே திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளனர். பாரதிய நியாய் சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகள் 103(1) (கொலை) மற்றும் 238 (ஆதாரங்களை மறைத்தல்) ஆகியவற்றின் கீழ் இரண்டு மைனர் குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவிய குடும்ப உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உறவினர்களில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்னொருவரை தேடி வருகிறோம்” என்றார்.

தற்போது கைதான இரண்டு சிறுவர்களும் தற்போது கோண்டாவில் உள்ள சிறார் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

christopher

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel