தவெக எம்.எல்.ஏ. விவகாரம்: பெண் ஆட்சியரின் மன வேதனை.. கவிதா ராமு ஐஏஎஸ் ’டெலீட்’ பதிவு வைரல்!

By Mathi

|

Published on 25 Nov 2026, 12:13 AM

TVK MLA Arul Vignesh Kavitha Ramu IAS

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான பாலியல் தொல்லை புகார் விவகாரத்தில், பெண் ஆட்சியர் அனுபவித்த மன உளைச்சல், மன வேதனை குறித்து ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமு சமூக வலைதளத்தில் வெளியிட்டு பின்னர் நீக்கியதாகக் கூறப்படும் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில் கவிதா ராமு கூறியிருப்பதாவது: சம்பந்தப்பட்ட அதிகாரி தற்போது எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளதால், இந்த விவகாரம் குறித்துப் பேசுவதில் தவறில்லை என்று கருதுகிறேன்.

ADVERTISEMENT

குறிப்பாக, இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான தகவல்களும் கதைகளும் பரவத் தொடங்கியபோது, சம்பந்தப்பட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கும் அவரது கணவருக்கும் அது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்திய காலகட்டமாக இருந்தது.

கள்ளக்குறிச்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியின் தகாத வாட்ஸ் அப் குறுஞ்செய்திகள் மற்றும் நடத்தைகள் தொடர்பான சம்பவம் ஏறத்தாழ 3 மாதங்களுக்கு முன்னரே நடந்திருந்தாலும், சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் பெரிதாகப் பேசப்பட்ட பின்னரே எங்களில் பெரும்பாலானோருக்கு அது தெரியவந்தது.

ADVERTISEMENT

உண்மையில், எங்களது ஆதரவைத் தெரிவிப்பதற்காக இந்த மாதம் 11-ந் தேதி சம்பந்தப்பட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரியுடன் விரிவாகப் பேசினேன். இந்த விவகாரம் மிக உயர்மட்ட அளவில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகவும், உரிய தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேநேரத்தில், இதுபோன்ற ஒரு சம்பவம் இதற்கு முன்பு எப்போதுமே நடந்ததில்லை என்பது போல, சில சமூக வலைதளக் கணக்குகள் இந்த விவகாரத்தைச் சித்தரித்த விதம் அவருக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறு கவிதா ராமு அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அந்தப் பதிவு நீக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அதன் ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் தற்போது பகிரப்பட்டு வருகிறது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel