ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. வழக்கு: 3 அதிகாரிகளிடம் 3 மணி நேரம் விசாரணை!

By Mathi

|

Published on 25 Nov 2026, 12:07 AM

TVK MLA Arul Vignesh Case

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான பாலியல் வழக்கில், சாட்சிகளாகச் சேர்க்கப்பட்ட 3 அதிகாரிகளிடம் போலீசார் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக எழுந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, வருவாய் கோட்டாட்சியர் முருகன், வட்டாட்சியர் சேகர் ஆகியோர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இவர்கள் 3 பேரிடமும் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று (நவம்பர் 24)-ந் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷஹனாஸ் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினார்.

இதனிடையே இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங்கை நீதிமன்றம் நியமித்துள்ளது. இதையடுத்து 3 அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான ஆவணங்கள் சிருஷ்டி சிங்கிடம் இன்று (நவம்பர் 25)-ந் தேதி ஒப்படைக்கப்பட உள்ளன.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel