கடலூர் அருகே பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதியதில் இரு மாணவர்கள் உயிரிழந்ததையடுத்து சில ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன. Cuddalore Train Accident
கடலூர் செம்மங்குப்பம் ஆளில்லாத ரயில்வே கேட்டை இன்று ஜூலை 8 செவ்வாய்க்கிழமையன்று பள்ளி வேன் கடந்த போது விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதி கோர விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சாருமதி என்ற மாணவியும் அவரது விமலேஸ் என்ற மாணவரும் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரயில் ஆலம்பாக்கம் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து தாம்பரம் சென்று கொண்டிருந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சிதம்பரம் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.
