அருங்காட்சியகம் திறப்பு!
குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊரான வத்நகரில் தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் விளையாட்டு வளாகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஜனவரி 16) திறந்து வைக்கிறார்.
காணும் பொங்கல்!
பொங்கல் திருவிழாவின் கடைசி நாளான காணும் பொங்கல் இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் பொதுமக்கள் கடற்கரை, பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு!
உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
பன்னாட்டு புத்தக திருவிழா!
சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா இன்று முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது.
விடாமுயற்சி ட்ரெய்லர்!
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகிறது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மாமன் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிக்கும் மாமன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
போக்குவரத்து மாற்றம்!
காணும் பொங்கலை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால், காமராஜர் சாலையில் இருந்து கலங்கரை விளக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள் மதியம் 1 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படாது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…