டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

வந்தே பாரத் ரயில்!

மேற்கு வங்க மாநிலத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று (டிசம்பர் 30) தொடங்கி வைக்கிறார்.

ADVERTISEMENT

பாமக பொதுக்கூட்டம்!

புதுச்சேரியில் இன்று பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆர்ப்பாட்டம்!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் இன்று புதுப்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

சபரிமலை கோவில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

துணிவு அப்டேட்!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகிறது.

மரம் நடும் விழா!

நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று திருப்பெரும்பதூர் மற்றும் முடிச்சூர் பகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பில் நாட்டு மரம் நடும் விழா நடைபெறுகிறது.

சேலம் மாமன்ற கூட்டம்!

சேலம் மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம், மேயர் திரு. ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெறுகிறது.

ராங்கி திரைப்படம் வெளியீடு!

சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ராங்கி திரைப்படம் இன்று வெளியாகிறது.

நூல் வெளியீடு!

பேராசிரியர் வெற்றி சங்கமித்ரா எழுதிய என் பார்வையில் எழுச்சி தமிழர் நூல் வெளியீட்டு விழா இன்று அம்பேத்கர் திடலில் நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

டிஜிட்டல் திண்ணை: மாசெக்கள், அமைச்சர்களுக்கு உதயநிதி கொடுத்த அடுத்த ஷாக்!

துணை முதல்வர் உதயநிதி: அன்பில் மகேஷ் குஷி பேச்சு!

Photo of author
Selvam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share