ராமதாஸை குடும்பத்துடன் சந்தித்த அன்புமணி

Published On:

| By Mathi

ramadoss anbumani

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை (Ramadoss) பாமக தலைவரும் அவரது மகனுமான அன்புமணி ராமதாஸ் (Anbumani) தமது குடும்பத்தினருடன் இன்று ஜூன் 24-ந் தேதி சந்தித்தார்.

பாமக இரண்டாக பிளவுபட்டுள்ளது. பாமக கட்சி பெயர், மாம்பழம் சின்னம் ஆகியவற்றை அன்புமணி ராமதாஸ் தரப்பு பயன்படுத்தி வருகிறது. சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் பாமக 4 இடங்களில் வென்றது. அன்புமணியின் மனைவி சவுமியா, தருமபுரி தொகுதியில் வெற்றி பெற்றார்.

ADVERTISEMENT

பாமக நிறுவனர் ராமதாஸ் குடும்பத்தில் 2 ஆண்டுகளாக மோதல் நீடித்து வந்தது. இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் இன்று தமது குடும்பத்தினருடன் ராமதாஸை சந்திக்க திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்துக்கு சென்றார்.

ராமதாஸின் 61-வது திருமண நாளை முன்னிட்டு அன்புமணி குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்தனர். இச்சந்திப்பைத் தொடர்ந்து ராமதாஸ் குடும்பத்தின் மோதல் முடிவுக்கு வருகிறது என்கின்றனர் பாமக நிர்வாகிகள்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share