தேனி எஸ்எஸ்ஐ கொலை வழக்கு: முதல்வரும் காவல்துறையும் முரண்பட்ட அறிக்கைகளை வெளியிட்டதால் பரபரப்பு

By Pandeeswari Gurusamy

|

Published on 9 Nov 2026, 4:23 PM

தேனியில் காவல் அதிகாரி செந்தில்குமார் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாடு காவல்துறையும் தமிழக முதல்வரும் முரண்பட்ட அறிக்கைகளை வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக (SSI) பணியாற்றி வந்த செந்தில்குமார், பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்த இளைஞர் கும்பலைத் தட்டிக்கேட்டதால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் தற்போது மூன்று பேரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் குடும்பத்திற்கு ரூபாய் 40 லட்சம் நிதியுதவி வழங்கி தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இருப்பினும், செந்தில்குமார் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக காவல்துறையும், தமிழக முதல்வரும் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் முரண்பாடான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பணியில் இருக்கும்போது செந்தில்குமார் கொலை செய்யப்பட்டதாகத் தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பணி முடிந்து வீடு திரும்பும்போது செந்தில்குமார் கொலை செய்யப்பட்டதாக தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தையே உலுக்கியுள்ள காவல் துறை அதிகாரியின் கொலை வழக்கில், தமிழ்நாடு காவல்துறையும் முதலமைச்சரும் முரண்பட்ட வகையில் அறிக்கை வெளியிட்டிருப்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel