தேனி: SSI குடும்பத்திற்கு ரூ.40 லட்சம் நிவாரணம் – முதல்வர் உத்தரவு

By Pandeeswari Gurusamy

|

Published on 9 Nov 2026, 1:58 PM

தேனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் குமார் சில நபர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார்.இந்நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு ரூ.40 லட்சம் நிதி உதவி வழங்கி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து, தேனி காவல் துணைக் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் மாற்றுப்பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார், நேற்று இரவு தனது பணியில் இருந்தபோது, சமதர்மபுரம் பகுதியில் சில நபர்கள் சாலையின் குறுக்கே பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் வகையிலும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் பட்டாசுகளை வெடித்து அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியதால் அவர்களை கண்டித்த போது அவர்கள் தாக்கியதில், பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

ADVERTISEMENT

சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமாரின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

செந்தில்குமாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு நாற்பது இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார் ” என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel