கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு ஜோதிமணி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுகவைச் சேர்ந்த சிலர் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் பதிவில்,கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு த வெ க சட்டமன்ற உறுப்பினர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும்,நேரில் சென்றுவிரும்பத்தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் முறைப்படி புகார் அளித்திருப்பதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.
இச்சமூக ஊடக செய்திகள் உண்மையென்றால் முறையாக விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒரு பெண் தனது அறிவு,திறமை,உழைப்பு மூலம் எவ்வளவு பெரிய உயரத்தை அடைந்தாலும் இறுதியில் வெறும் பெண்ணாகவும், உடலாகவும் மட்டுமே பார்க்கின்ற இம்மாதிரியான மோசமான மனநிலையை நாம் நிச்சயமாக கடந்து போய்விட முடியாது.
தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர்களில் ஏறக்குறைய 50% பேர் பெண்கள். பெண்களின் உழைப்பு,திறமை,நிர்வாகத்திறன் மீது மாண்புமிகு முதலமைச்சருக்கு உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை இது காட்டுகிறது. ஆனால் இதுபோன்ற மோசமான செயல்கள் ஆட்சிக்கும்,கட்சிக்கும் களங்கம் விளைவிக்கக் கூடியவை. இதை வளரவிடாமல் ஆரம்பத்திலேயே கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்நிலையில் ஜோதிமணி கண்டனம் குறித்து திமுகவினர் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இதுகுறித்து திமுகவைச் சேர்ந்த மதுரை பாலா தனது எக்ஸ் தளத்தில் , 2029 ல் கரூரில் தவெகவிடம் பிச்சை எடுக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு
ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும்
நேரில் சென்றுவிரும்பத்தகாத முறையில் நடந்துகொண்டதாகவும்
இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் முறைப்படி புகார் அளித்திருப்பதாகவும்” என விமர்சித்துள்ளார்.









