பட்டாசு வெடித்து ரீஸ்ஸ் எடுத்த இளைஞர்களால் தாக்கப்பட்ட எஸ்எஸ்ஐ உயிரிழப்பு

By Pandeeswari Gurusamy

|

Published on 9 Nov 2026, 9:50 AM

தேனியில் பணி முடிந்து திரும்பியபோது, பட்டாசு வெடித்த இளைஞர்களை எஸ்.எஸ்.ஐ. செந்தில்குமார் கண்டித்ததால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் தாக்கியதில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தேனியில் எஸ்.எஸ்.ஐ.யாகப் பணிபுரிந்து வந்தவர் செந்தில்குமார். இவர் பணி முடிந்து திரும்பியபோது, இளைஞர்கள் சிலர் சாலையை மறித்து பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்துள்ளனர். இதைப் பார்த்த எஸ்.எஸ்.ஐ. இளைஞர்களைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், எஸ்.எஸ்.ஐ. செந்தில் குமார் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார்.

ADVERTISEMENT

இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் எஸ்.எஸ்.ஐ. செந்தில்குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் 4 பேரை பிடித்து செய்து விசாரணை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel