அட்மிஷன் திருவிழா! – இன்ஜினியரிங், ஆர்ட்ஸ் முதல் அக்ரி வரை…

Published On:

| By Santhosh Raj Saravanan

tamilnadu college admission 2026 last date tnea tngasa tnau details

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 2026-2027 கல்வியாண்டுக்கான பட்டய மற்றும் பட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு (Online Admission Registration) தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

அட்மிஷன் டெட்லைன்: நோட் பண்ணிக்கோங்க பாஸ்!
  • ஆர்ட்ஸ் & சயின்ஸ் (TNGASA 2026): தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சுமார் 1,26,959 இடங்களுக்கு மே 7-ஆம் தேதி முதல் விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. இதற்கான கடைசித் தேதி வரும் மே 29, 2026.
  • பொறியியல் (TNEA 2026): பி.இ, பி.டெக் படிப்புகளுக்கான ஆன்லைன் பதிவு மே 7-ல் தொடங்கியது. இதற்கு விண்ணப்பிக்க வரும் ஜூன் 2, 2026vதான் கடைசி நாள் பாஸ்!.
  • வேளாண் அறிவியல் (TNAU 2026): பி.எஸ்சி அக்ரி மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பப் படிப்புகளுக்கான பதிவு மே 6-ல் தொடங்கியது. இதற்கான கடைசித் தேதி ஜூன் 8, 2026.
  • பாலிடெக்னிக் (DTE 2026): டிப்ளமோ படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு மே 4 முதல் நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க மே 30, 2026 கடைசி நாள் பாஸ்!.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் இணையதள விவரங்கள்

கலை மற்றும் அறிவியல் படிப்புகள் (Arts & Science):

ADVERTISEMENT
  • இதற்கான அதிகாரப்பூர்வ இணையதளம்: www.tngasa.in
  • விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 50 ரூபாய்.
  • எஸ்சி/எஸ்டி (SC/ST) மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது, வெறும் 2 ரூபாய் பதிவுக்கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.

பொறியியல் படிப்புகள் (Engineering – B.E/B.Tech):

  • இதற்கான அதிகாரப்பூர்வ இணையதளம்: www.tneaonline.org
  • விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 500 ரூபாய்.
  • எஸ்சி/எஸ்டி (SC/ST) மாணவர்களுக்குக் கட்டணச் சலுகை உண்டு, அவர்கள் 250 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும்.

விவசாயப் படிப்புகள் (Agriculture – TNAU):

ADVERTISEMENT
  • இதற்கான அதிகாரப்பூர்வ இணையதளம்: tnau.ac.in
  • கட்டண விவரங்களை இணையதளம் வாயிலாகத் தெளிவாகச் சரிபார்த்துக்கொள்ளவும்.

பாலிடெக்னிக் படிப்புகள் (Diploma – DTE):

  • இதற்கான அதிகாரப்பூர்வ இணையதளம்: www.tnpoly.in
  • 10ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் நேரடியாக முதலாமாண்டிலும், 12-ஆம் வகுப்பு முடித்தவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டிலும் (Lateral Entry) சேரலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?

உங்களது பெயர், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து முதலில் பதிவு செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

உங்களது தனிப்பட்ட விவரங்கள், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் கல்விச் சான்றிதழ் விவரங்களை மிகச்சரியாக உள்ளிட வேண்டும். நெட் பேங்கிங், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் ஆன்லைனிலேயே விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம்.

உங்களது 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ் மற்றும் புகைப்படத்தைச் சரியான அளவில் ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டும். குறிப்பாக ஆர்ட்ஸ் மற்றும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் உங்களுக்குப் பிடித்த கல்லூரிகளை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.

அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீடு உண்டு. அப்ளிகேஷன் போடும்போது இந்த ஆப்ஷனை மறக்காமல் ‘Check’ பண்ணுங்க பாஸ்!.

உங்களுக்கு வீட்ல நெட் வசதி இல்லையா? கவலையை விடுங்க பாஸ். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு கல்லூரிகளில் ‘பொறியியல் சேர்க்கை உதவி மையங்கள்’ (TFC) மற்றும் ‘கலை அறிவியல் உதவி மையங்கள்’ (AFC) அமைக்கப்பட்டுள்ளன. அங்க போனா அவங்களே உங்களுக்கு ஃப்ரீயாவே ஹெல்ப் பண்ணுவாங்க.

மே 29 மற்றும் ஜூன் 2 ஆகிய தேதிகள் நெருங்க நெருங்க இணையதளத்தில் நெரிசல் அதிகமாகும். சர்வர் ‘பிஸி’ ஆக வாய்ப்பு இருப்பதால், கடைசி நாள் வரை காத்திருக்காமல் இன்றே விண்ணப்பியுங்கள்.

நீங்கள் கொடுக்கும் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உங்களுடையதாகவே இருக்கட்டும். அட்மிஷன் மற்றும் கவுன்சிலிங் தொடர்பான ரகசிய எண்கள் (OTP) மற்றும் அப்டேட்கள் அந்த எண்ணிற்குத்தான் வரும்.

உங்க கரியரைத் தீர்மானிக்கிற இந்த முக்கியமான நேரத்துல சரியான முடிவை எடுங்க பாஸ். இன்ஜினியரிங் கனவோ இல்ல விவசாயத் துறையில சாதிக்கிற ஆசையோ, எதா இருந்தாலும் இந்தத் தேதிகளுக்குள்ள அப்ளை பண்ணி உங்க சீட்டை உறுதி செய்யுங்க. “முயற்சி பண்ணுனா இந்த மே, ஜூன் மாதங்கள்ல உங்க கரியர்ல ஒரு மாஸ் டர்னிங் பாயிண்டா அமையும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share