தமிழகத்தில் விடாது கொட்டும் மழை: வீடுகள் இடிந்து இருவர் பலி- 3 பேர் படுகாயம்

By Mathi

|

Published on 30 Nov 2025, 9:13 AM

Rain Tamil Nadu

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வீடுகள் இடிந்து 2 பேர் பலியாகி உள்ளனர்; 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வங்க கடலில் மையம் கொண்ட டிட்வா புயலால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. தற்போது சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாட்டின் கரையை டிட்வா புயல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த புயல் கடலிலேயே வலுவிழந்த நிலையில் மழையின் தாக்கம் நீடித்து வருகிறது.

ADVERTISEMENT

காவிரி டெல்டா மற்றும் வடதமிழகத்தில் அதீத கனமழை இன்று பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தொடர் மழையால் தமிழ்நாட்டில் 2 பேர் பலியாகி உள்ளனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

தூத்துக்குடி, கும்பகோணத்தில் வீடுகள் இடிந்து 2 பேர் பலியாகி உள்ளனர்; 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். மழை வெள்ளத்தில் சிக்கி 121 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

மழை வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள மாநிலம் முழுவதும் பேரிடர் மீட்புக் குழுக்களை தமிழக அரசு தயார் நிலையில் வைத்துள்ளது.

ADVERTISEMENT

டிட்வா புயல் காரணமாக பாம்பன் பாலம் வழியாக ராமேஸ்வரத்துக்கான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. காற்றின் வேகம் சற்று குறைந்த நிலையில் காலி ரயில் பெட்டிகளை இணைத்து பாம்பன் ரயில் பாதையில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel