“தமிழ்நாட்டிற்கு நியாயமான நிதி எப்போது கிடைக்கும்?” : எம்.பி. வில்சன் கேள்வி!

Published On:

| By christopher

“Tamil Nadu has not received fair funding!”: MP Wilson

சென்னை மெட்ரோ திட்ட பணிகளுக்கு நியாயமான நிதி கிடைக்கவில்லை என திமுக எம்.பி. வில்சன் மத்திய பாஜக அரசை குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (நவம்பர் 28) தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-1, கட்டம்-1 விரிவாக்கம் மற்றும் கட்டம்-2 என மொத்தம் 173 கிலோமீட்டர் நீளமுள்ள மெட்ரோ இரயில் திட்டங்களுக்கு ரூ.85,395 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.

ADVERTISEMENT

இதில் சென்னை மெட்ரோ கட்டம் -1 விரிவாக்கம் உட்பட சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு ரூ.15,355.78 கோடி முழுவதையும் விடுவித்துள்ளது என்று ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை இணை அமைச்சர்  டோக்கான் சாஹு பதில் அளித்துள்ளார்.

ஆனால், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.986.78 கோடி என்று அவரது எழுத்துப்பூர்வ பதிலில் இருந்து தெரியவந்திருக்கிறது! இதில் எந்த எண்ணிக்கை சரியானது அமைச்சர் அவர்களே?

ADVERTISEMENT

மேலும், சென்னை மெட்ரோ இரயில் திட்டங்களுக்காக தமிழ்நாட்டிற்கு மிகக் குறைந்த நிதியை ஒதுக்கீடு செய்தது குறித்தோ அல்லது பெரும் பற்றாக்குறைத் தொகை தமிழக அரசுக்கு எப்போது ஈடு செய்யப்படும் என்பது குறித்தோ வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை..

ADVERTISEMENT

ஒன்று மட்டும் நிச்சயம்: தமிழகத்திற்கு நியாயமான நிதி கிடைக்கவில்லை” என்று திமுக எம்.பி.வில்சன் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சொல்வதெல்லாம் உண்மை… அன்னபூரணியின் அடுத்த திருமணம்!

மூன்று ஆண்டுகளில் 1.69 லட்சம் விவசாய மின் இணைப்புகள்… செந்தில் பாலாஜி பெருமிதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share