சமூக வலைதளங்களில் வைரல் சாமியார் தான் அன்னபூரணி. இவர் தன்னை பராசக்தியின் அடுத்த உருவம் என கூறி வருவதுடன், பக்தர்களுக்கு ஆசியும் வழங்கி வருகிறார். பளபளக்கும் பட்டுச்சேலை அணிந்து மக்களுக்கு அருள்வாக்கு சொல்வார்.
கடந்த 2014ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் அடுத்தவர் கணவரோடு வாழ்ந்து வந்த விவகாரம் தொடர்பான நிகழ்ச்சியில் அன்னபூரணி கலந்து கொண்டிருந்தார். இவர் தற்போது சாமியார் அவதாரம் எடுத்திருப்பதால் பலரும் கேலியும் கிண்டலும் செய்கின்றனர். ஆனால், அதையும் தாண்டி தான் ஆன்மீக பணி செய்து வருவதாக அவர் கூறுகிறார்.
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த இவர், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த ராஜாதோப்பு பகுதியில் ஆசிரமம் தொடங்கியுள்ளார். இவரது ஆசிரமத்தில் அன்னபூரணிக்கு பாதபூஜை செய்தும், மாலை அணிவித்தும், மலர்தூவியும், கற்பூரம் ஏற்றியும், தீபாராதனை காண்பித்தும் பக்தர்கள் ஆசி பெறுவது வாடிக்கையாக நடைபெறும் ஒன்று.
இந்த சூழ்நிலையில் தான் அன்னபூரணி ரோகித் என்பவரை இரண்டாவதாக இன்று திருமணம் செய்துள்ளார். நவம்பர் 28ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக சமூகவலைதளத்தில் ஏற்கனவே கல்யாண அழைப்பிதழ் ஒன்று பரவி வந்தது.
திருமணம் குறித்து அவர் கூறுகையில், ‘சக்தி என்னை இயக்கினாலும் சமுதாயத்தின் பார்வையில் தனி ஒரு பெண்ணாக இருப்பதால் இடையூறுகள் ஏற்படுவதே எனது இரண்டாவது திருமணத்துக்கு காரணம். நானும் எனது முன்னாள் கணவர் அரசுவும் திருமணம் செய்து கொண்ட நாளான அதே நவம்பர் 28 ஆம் தேதி ரோகித்தை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று அவர் தெரிவித்திருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
மூன்று ஆண்டுகளில் 1.69 லட்சம் விவசாய மின் இணைப்புகள்… செந்தில் பாலாஜி பெருமிதம்!
எஸ்.பி.பி-யின் ஏஐ குரலை பயன்படுத்த சரண் தடை: காரணம் என்ன?
பல் உள்ளவன் பக்கோடா தின்னுங்க..
பொறாம எதுக்காம்..😝😝😝😝